மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் திருமங்கலம் மின்வாரிய அதிகாரி கைது :

மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் திருமங்கலம் மின்வாரிய அதிகாரி கைது :
Updated on
1 min read

திருமங்கலம் அருகே பொன்னமங்கலத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவர் விவசாய மின் இணைப்புக்காக திருமங்கலம் பேருந்து நிலைய பின்பகுதியில் உள்ள மேற்கு மின்வாரிய அலுவலகத்தில் ரூ.24,500-ஐ செலுத்தினார். இணைப்பு வழங்க உதவி செயற்பொறியாளர் முகமது உபேஸ் (38) ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையில் காட்டுராஜா புகார் செய்தார். போலீஸார் ஆலோசனைப்படி மின்வாரிய அலுவலகத்தில் வைத்து ரூ.20 ஆயிரத்தை உதவி செயற் பொறியாளரிடம் காட்டுராஜா கொடுத்தார். அப்போது, அங்கு வந்த டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் கண்ணன், குமரகுரு, ரமேஷ் பாபு, அம்புரோஸ் ஆகியோர் முகமது உபேஸை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in