

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 72 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 10, சேர்வலாறு- 26, மணிமுத்தாறு- 26.4, கொடுமுடியாறு- 50, அம்பாசமுத்திரம்- 38, ராதாபுரம்- 3, நாங்குநேரி- 32, களக்காட்டில் 58.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 138.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,087 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,637 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு வரும் 400 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
திருக்குறுங்குடியில் பலத்த மழை பெய்தபோது கைகாட்டி சந்திப்பில் நிற்கும் வாகை மற்றும் தேக்கு மர கிளைகள் முறிந்து மின்வயர்கள் மீது விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. திருநெல்வேலி பேட்டை யிலுள்ள மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே அலாவுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தென்காசி
அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் ஏற்கெனவே நிரம்பியுள்ளதால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 40 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 300 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 71 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அடவிநயி னார் அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் 131.25 அடியாக இருந்தது.
தற்காலிக பாதை சேதம்
இதனால், போக்குவரத்துக்கு தற்காலிக மண் சாலை அமைக்கப் பட்டிருந்தது.
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.