Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

ஆய்க்குடியில் 76 மி.மீ., சேரன்மகாதேவியில் 72 மி.மீ மழை : பேட்டையில் வீடு இடிந்தது, திருக்குறுங்குடியில் மரங்கள் முறிந்தன

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 72 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 10, சேர்வலாறு- 26, மணிமுத்தாறு- 26.4, கொடுமுடியாறு- 50, அம்பாசமுத்திரம்- 38, ராதாபுரம்- 3, நாங்குநேரி- 32, களக்காட்டில் 58.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 138.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,087 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,637 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு வரும் 400 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

திருக்குறுங்குடியில் பலத்த மழை பெய்தபோது கைகாட்டி சந்திப்பில் நிற்கும் வாகை மற்றும் தேக்கு மர கிளைகள் முறிந்து மின்வயர்கள் மீது விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. திருநெல்வேலி பேட்டை யிலுள்ள மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே அலாவுதீன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவில் இடி, மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 76 மி.மீ. மழை பதிவானது. சிவகிரியில் 61 மி.மீ., அடவிநயினார் அணையில் 42 மி.மீ., தென்காசியில் 20.40 மி.மீ., சங்கரன்கோவிலில் 26 மி.மீ., கருப்பாநதி அணையில் 15 மி.மீ., கடனாநதி அணையில் 12 மி.மீ., ராமநதி அணையில் 10 மி.மீ., குண்டாறு அணை, செங்கோட்டையில் தலா 2 மி.மீ மழை பெய்துள்ளது.

அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் ஏற்கெனவே நிரம்பியுள்ளதால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 40 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 300 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 71 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அடவிநயி னார் அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீர்மட்டம் 131.25 அடியாக இருந்தது.

தற்காலிக பாதை சேதம்

சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன ஒப்பனையாள்புரம் - பனையூர் ஊர்களுக்கு இடையே உள்ள குளம் நிரம்பி உபரி நீர் செல்லும் பாதையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால், போக்குவரத்துக்கு தற்காலிக மண் சாலை அமைக்கப் பட்டிருந்தது.

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x