

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் உள்ள தனியார் பள்ளி வாகனம் அகஸ்தியர்கூட்டம் கிராமத்துக்கு நேற்று மாலை குழந்தைகளை இறக்கிவிடச் சென்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சேகரின் 4-ம் வகுப்பு படிக்கும் மகன் தர்ஷனை வேன் ஓட்டுநர் வாசு இறக்கிவிட்டுள்ளார். அப்போது தர்ஷனின் தாயார், அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை அபிசசிகாவை கீழே இறக்கிவிட்டு விட்டு, தர்ஷனின் கையை பிடித்து வேனிலிருந்து இறக்கியுள்ளார். இதனிடையே குழந்தை அபிசசிகா வேனின் பின்புற சக்கரத்தின் அருகே நின்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் ஓட்டுநர் வேனை எடுத்துள்ளார். இதில் வேனின் பின் சக்கரத்தில் அபிசசிகா சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாசுவை கைது செய்தனர்.