வாகன வீதிமீறல்: ரூ.2.87 லட்சம் அபராதம் வசூல் :

வாகன வீதிமீறல்: ரூ.2.87 லட்சம் அபராதம் வசூல் :
Updated on
1 min read

மதுரையில் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், வாகன பதிவெண்களில் மாற்றம், சைலன்சர் மாற்றுதல், பம்பர் பொருத்துதல் போன்ற விதிமீறல் கள் குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த மாதம் மட்டும் பதிவெண் கள் மாற்றம் செய்தது தொடர்பாக 1,870 வழக்குகளும், சைலன்சர் மாற்றம் குறித்து 219 வழக்குகளும், பம்பர் பொருத்தியது தொடர்பாக 430 வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன.

இவற்றின் மூலம் ரூ.2,87,600 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in