வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி கோளரங்கம் :

திருச்சி அண்ணா கோளரங்கத்தில் குளம் போல தேங்கியுள்ள மழைநீர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி அண்ணா கோளரங்கத்தில் குளம் போல தேங்கியுள்ள மழைநீர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்க வளாகத்தில் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளதால் அதிலுள்ள உபகரணங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் கடந்த 15 நாட் களுக்கும் மேலாக பெய்த மழை காரணமாக கொட்டப் பட்டு பெரியகுளம் நிரம்பி, அருகில் உள்ள அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்ததால், தற்போது கோளரங்க வாயில் வரை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால், இந்த வளாகத்தில் பரிணாம வளர்ச்சிப் பூங்காவில் உள்ள சிற்பங்கள், அறிவியல் பூங்காவில் உள்ள உபகரணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், உபகரணங்கள், கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனால், கோளரங் கத்துக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை.

மேலும், பெரியகுளத்தில் உள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்காததால், இந்த வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘அங்கு மழைநீரை வடிய வைக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in