Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM

வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

பெரம்பலூர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கை.களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள துணை மின்நிலையம் அமைக் கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்ட 2017-ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டும், இதுவரை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் வட்டக் குழு உறுப்பினர் கே.எம்.சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சிங்கார வேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x