

திருநெல்வேலி அருகே மாய னேரியைச் சேர்ந்த முத்துக்குட்டி மனைவி அபிராமி (21). இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழை த்து வரப்பட்டார். ரெட்டியார்பட்டி அருகே சிவந்திப்பட்டி மலைப் பகுதியில் ஆம்புலன்ஸ் வந்தபோது அபிராமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவப் பணியாளர் பார்வதி, அபிராமிக்கு பிரசவ சிகிச்சை அளித்தார். அபிராமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.