கனமழையால் அசப்பூர்-ராயநல்லூர் சாலை துண்டிப்பு :

மரக்காணம் அருகே அசப்பூர்- ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் தார் சாலை .
மரக்காணம் அருகே அசப்பூர்- ராயநல்லூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் தார் சாலை .
Updated on
1 min read

மரக்காணம் அருகே கனமழையால் அசப்பூர்-ராயநல்லூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்தது. இக்கன மழையால் இங்குள்ள 20- க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேறுகிறது. அந்த வகையில் மரக்காணம் அருகே அசப்பூர் - ராயநல்லூர் கிராமத்திற்கு இடையே செல்லும் பிரதான தார் சாலையை வெள்ளம் அடித்துச்சென்றது. இச்சாலை துண்டிக்கப்பட்டதால் நாவல்பாக்கம், நல்லம்பாக்கம், பந்தாடு, ஆவணிபூர்,கம்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட கிராமங்களுக்கு செல்லும்போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த நெல், மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இங்கு மேம்பாலம் அமைத்து சாலையின் அருகில் உள்ள ஓடையின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in