விழுப்புரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் :

விழுப்புரத்தில்  மாவட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள்  கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் மாவட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் மாவட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர் கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பிருதிவிராஜ், மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினர். ஒப்பந்த அடிப்படையில் கரோனா காலங்களில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்கள் பணி நீக்கத்தைக் கண்டித்தும், அவர்களை சுகாதார ஆய்வாளர்களாக நிரந்தர ஊதியம் அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ள சுகாதார துறை சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர் 1,600 பேரை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in