தடை :

தடை  :
Updated on
1 min read

நாமக்கல் தூசூர் ஏரியில் இருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேறி வருவதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

நாமக்கல் அருகே தூசூரில் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொல்லிமலை அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏரி அதன் முழுக் கொள்ளளவையும் எட்டி நிரம்பி வழிகிறது.

ஏரி முழுக் கொள்ளளவையும் எட்டியிருப்பதால் கடல் போல் காட்சியளித்து வருகிறது. ஏரியின் அழகைக் காண நாள்தோறும் நாமக்கல் அதன் சுற்றுவட்டார மக்கள் அதிகளவில் திரண்டு வந்த ரசித்துச் செல்கின்றனர். உபரி நீர் வெளியேறும் இடங்களுக்கும் மக்கள் செல்கின்றனர்.

மேலும், சிலர் ஏரி நீரில் குளிக்கின்றனர். இது விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதால் ஏரியின் உபரிநீர் வெளியேறும் பகுதிக்கு செல்லவும், ஏரியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in