Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

தொடர் வீட்டுக்காவலில் வைத்ததைக் கண்டித்து - தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் :

தொடர் வீட்டுக் காவலில் வைத் ததைக் கண்டித்து, தேசிய- தென் னிந்திய நதிகள் இணைப்பு விவசா யிகள் சங்கத்தினர் திருச்சியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட் டனர்.

தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சங்க அலு வலகத்தில் நேற்று நடைபெற் றது. சங்கத்தின் மாநிலத் தலை வர் பி.அய்யாக்கண்ணு தலைமை யில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தில், நிர்வாகிகள் வி.தங்கமுத்து, கே.ஜாகிர் உசேன், பி.மேகராஜன், எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பல்வேறு விவ சாய சங்க நிர்வாகிகளை டெல்லி செல்ல அனுமதிக்கும் போலீஸார், அய்யாக்கண்ணுவை மட்டும் அனுமதிக்க மறுத்து 61 நாட்கள் வீட்டுக் காவலில் வைத்துள்ளதைக் கண்டிப்பது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வேளாண் விளைப் பொருட்களுக்கு உற் பத்தி செலவுடன் 2 மடங்கு விலை தர வேண்டும். விவசாய குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் வீதம் கடன் கொடுக்க வேண்டும். கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்.

டெல்லி போராட்டத்தில் உயிரி ழந்த விவசாயிகளின் குடும்பங் களுக்கு தலா ரூ.1 கோடியும், அவர்களது குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசுப் பணியும் மத்திய அரசு வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் அனுமதி பெற்று, 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன் படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

பின்னர், 61 நாட்களாக அய் யாக்கண்ணுவை வீட்டுக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்து, கரூர் புறவழிச் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x