எஸ்எம்ஏ பள்ளியில் புத்துணர்வு பயிற்சி :

எஸ்எம்ஏ பள்ளியில் புத்துணர்வு பயிற்சி  :
Updated on
1 min read

பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் புத்துணர்வு பயிற்சி நடைபெற்றது. தாளாளர் ராஜசேகரன் வரவேற்றார். பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

கேரள அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ டிஐஜி பழனிசாமி பேசும்போது, “பொறுமை இழத்தல், சோம்பல், காலையில் தாமதமாக எழுதல், கவனக்குறைவு, தேர்வுகளை தவிர்த்தல், தேர்வு பயம், நேரத்தை வீணாக்குதல், கவனமின்மை, ஆர்வமின்மை, தோல்வி பயம், பணிகளை தள்ளிப்போடுதல், சினம், வெட்கப்படுதல், அலட்சியம், சுயநலம், பிடிவாதம், தலைக்கனம், பயம், தாழ்வு மனப்பான்மை, கருத்துகளை பகிராமை போன்ற பலவீனங்களை களைய வேண்டும். திட்டமிடுதல், மனநிலைக்கு ஏற்ப பாடத்தை பிரித்து படித்தல், இரவில் முழுமையாக தூங்குதல், கால அட்டவணை போட்டு படித்தல், குறிப்பெடுத்தல், படிப்பில் கவனம், அமைதியான படிக்கும் சூழல், குழு அமைத்து படித்தல், சந்தேகங்களை நிவர்த்தி செய்தல் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். புரிந்து படித்தல், பயிற்சி எடுத்தல், உடல் ஆரோக்கியம், அறியாதவற்றை தயக்கமின்றி கேட்டல், குறிக்கோளை தீர்மானித்தல், தன்னம்பிக்கை, நேரம் தவறாமை போன்ற பண்புகளை மாணவப் பருவத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in