மூன்றடைப்பில் செவிலியர் கைது :

மூன்றடைப்பில் செவிலியர் கைது :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவைகுளம் பகுதியைச் சேர்ந்த பேச்சி மகன் மாரி. காய்ச்சல் காரணமாக மருதகுளம் பகுதியிலுள்ள கிளினிக்கில் அவருக்கு மருத்து வரின் பரிந்துரையின்படி, மூன்ற டைப்பை சேர்ந்த செவிலியர் இசக்கியம்மாள் (29) ஊசி போட்டுள்ளார். ஊசிபோட்ட இடத்தில் வலி இருந்ததால் மீண்டும் அதே கிளினிக்குக்கு சென்று ஊசிபோட்டுள்ளார். ஆனால், வலி அதிகரித்ததால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது தவறான முறையில் ஊசிபோட்டதால் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள் ளனர். பின்னர், மதுரையிலுள்ள மருத்துவமனையில் மாரி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, பேச்சி புகாரின் பேரில் இசக்கியம்மாளை மூன்றடை ப்பு போலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தேடப்படுகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in