வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை : வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் இளம்பெண் புகார்

வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை :  வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் இளம்பெண் புகார்
Updated on
1 min read

வரதட்சனை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தவாக கைக் குழந்தையுடன் பட்டதாரி பெண் வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க வந்தார்.

வேலூர் மாவட்டம் ஏ.கட்டுபடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்தியா (25). இவர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கைக் குழந்தை யுடன் புகார் அளிக்க வந்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முதுகலை பட்டம் பெற்ற நான், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான புருஷோத்தமன்(24) என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், எனது கணவரின் தாயார் மற்றும் மைத்துனர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். இதற்கு உடந்தையாக எனது கணவரும் உள்ளார். மேலும் நான் தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது கணவர் என்னை ஆபாசமாக பேசுகிறார்.

வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்துகின்றனர். எனவே, மாமியார், மைத்துனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவரை அழைத்து அறிவுரை வழங்கி என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

மனுவைபெற்ற காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in