

வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டம், கனமழை காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று ரத்து செய்யப்பட்டது. கனமழை காரணமாக இக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக இரு மாவட்ட ஆட்சியர்களும் நேற்று முன் தினம் அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று எவரும் மனு அளிக்க வரவில்லை. அதே நேரத்தில், கடலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய் )ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.