திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பெண் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி :

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பெண் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி :
Updated on
1 min read

வத்தலகுண்டு காந்தி நகரைச் சேர்ந்த எபினேசர் மனைவி அன்னாள். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தனது வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்துகிறார். இவரது உறவினர் ஜெமிமா. இருவரும் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஜார்ஜ் மானசேவுக்கு ரூ.13 லட்சம் கடன் கொடுத்துள்ளனர். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர் தரவில்லை. இதுகுறித்து அன்னாளும், ஜெமிமாவும் வத்தலகுண்டு போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் பணத்தை திருப்பித் தர மறுக்கும் ஜார்ஜ் மானசே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிப்பதற்காக அன்னாள், அவரது 3 குழந்தைகள், ஜெமிமா, அவரது 2 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை போலீஸார் தடுத்து காப்பாற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in