அரசு வேலை வாங்கி தருவதாக சிவகாசி அருகே ரூ.10.48 லட்சம் மோசடி : அரசு ஊழியர் உட்பட 2 பேர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கி தருவதாக சிவகாசி அருகே ரூ.10.48 லட்சம் மோசடி :  அரசு ஊழியர் உட்பட 2 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10.48 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக அரசு மருத்துவமனை ஊழியர் உட்பட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்சிங் (29). இவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வரும் கொங்கன்குளத்தைச் சேர்ந்த அய்யலு, சென்னையைச் சேர்ந்த ஏழுமலை பெஞ்சமின் ஆகியோர் அணுகி, பணம் கொடுத் தால் அரசு வேலை வாங்கித் தரு வதாகக் கூறியுள்ளனர். இதை நம்பி சுரேஷ்சிங்கும், அதே பகுதி யைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி ஷோபா சுபாஷினியும் சேர்ந்து ஏழுமலை பெஞ்சமினின் வங்கிக் கணக்கில் 2018-2019 ஆண்டில் 3 தவணைகளில் மொத் தம் ரூ.8 லட்சத்து 8 ஆயிரத் தை வழங்கியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரும் ரூ.2.40 லட்சம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷ்சிங்குக்கு சென்னை தலைமைச் செயலகத் தில் தகவல்தொடர்புத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கான ஆணையையும், ஷோபா சுபாஷி னிக்கு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவி யாளர் பணிக்கான ஆணை யையும், ஜெயந்திக்கு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இள நிலை உதவியாளர் பணிக்கான ஆணையையும் அய்யலு, ஏழுமலை பெஞ்சமின் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அலுவலகங் களில் சுரேஷ்சிங் உள்ளிட்ட மூவரும் விசாரித்தபோது பணி ஆணைகள் போலியானது எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து, மாறனேரி காவல் நிலையத்தில் சுரேஷ்சிங் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அய்யலு, ஏழுமலை பெஞ்சமின் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in