சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு :

சிலம்பாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு :
Updated on
1 min read

தி.மலை மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவி லான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வந்தவாசியில் நடைபெற்றது.

மாவட்ட சிலம்பாட்ட கழகத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமை வகித்தார்.

அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியின் தாளாளர் பா.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி வரவேற்புரை யாற்றினார். வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், திருவண்ணா மலை, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். நடுவர்களாக ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக தேசிய நடுவர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் செயல்பட்டனர்.

சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் சேத்துப்பட்டு புத்தாஸ் சிலம்பக் குழு சேதுராமன், பெண்கள் பிரிவில் திருவண்ணா மலை சிலம்பக் குழு தர்ஷினி, ஆண்களுக்கான சீனியர் பிரிவில் பெரணமல்லூர் இளவரசன், பெண்களுக்கான சீனியர் பிரிவில் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவி லட்சுமி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

போட்டிகளில் வென்றவர் களுக்கு காவல் துணை கண் காணிப்பாளர் கா.விஸ்வேஸ்வரய்யா, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற் றினார். வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்தமிழன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க செயலாளர் பா.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட அளவிலான போட்டி களில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், சிவகங்கையில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் பங் கேற்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in