Regional01
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க எம்.பி. வலியுறுத்தல் :
சமூகப் பாதுகாப்புத்துறை விவரப்படி மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 478. அதில் 258 பேர் ஆய்வு செய்யப்பட்டும், இன்னும் 163 பேர் ஆய்வு செய்யப்பட வேண்டியும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதில் 13 பேருக்கு மட்டுமே நிவாரணத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணத்துக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஏ.கணேசன், பிரதமர் நிவாரண நிதிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கே.தர் ஆகியோரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
