ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய மீனவர் உடல் :

ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய மீனவர் உடல் :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சாத்தக் கோன்வலசை கடற்கரையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் உடல் மிகவும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. மண்டபம் மெரைன் போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் மணிமுத்து(40) என தெரிய வந்தது. இவர் கடந்த 22-ம் தேதி கோட்டைப்பட்டினம் கடலில் மீன்பிடித்தபோது படகு கவிழ்ந்து காணாமல் போனது போலீஸாரால் உறுதிப் படுத்தப்பட்டது.

இதையடுத்து மீனவர் மணி முத்துவின் மனைவி சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் உடலைப் பார்த்து இறந்தவர் மணிமுத்துதான் என உறுதிப் படுத்தினர். அதன்பின் உடற்கூறு ஆய்வுக்காக மீனவரின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இது தொடர்பாக மண்டபம் மெரைன் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in