மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிய வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு : அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிய வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு :  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளின் தேவை களை கண்டறிய வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது என மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்ட மாற்றுத் திறனா ளிகள் நலத் துறை சார்பில் வேலா யுதம்பாளையத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் அண்மை யில் நடைபெற்றது.

இதில், 28 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 5 பேருக்கு சக்கர நாற்காலிகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழங்கி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 300 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர், அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேசியது: மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வகையில் கரூர் வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாம்களில் தேசிய அடையாள அட்டை கோரி 164 பேர், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை கோரி 319 பேர், வங்கி கடனுதவி கோரி 103 பேர், பராமரிப்பு உதவித் தொகை கோரி 154 பேர், கல்வி உதவித்தொகை கோரி 70 பேர் மற்றும் பிற உதவிகள், உடல் இயக்க குறைபாடுகள், காது கேளாமை, மன வளர்ச்சி குன்றிய தன்மை, கண் குறைபாடு, செயற்கை கை, கால் உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 1,002 மாற்றுத்திறனாளி கள் மனு அளித்திருந்தனர். இதில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. பிற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மிக நவீனமயமாகவும், தரம் வாய்ந் ததாகவும் தயார் செய்து வழங்கு கிறோம்.

மேலும், கரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுக ளுக்கே சுகாதார பணியாளர்கள் நேரில் சென்று 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிய வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங் கும் வீடுகளை அவர்களுக்கு ஏற்றவகையில் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட வருவாய் அலுவ லர் எம்.லியாகத், அரவக்குறிச்சி எம்எல்ஏ பி.ஆர்.இளங்கோ, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் எ.எஸ்.பாலசுப்ர மணியன், புகழூர் வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in