சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை :

சிறுபான்மையின மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை  :
Updated on
1 min read

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு, வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (National Scholarship portal) 30.11.2021-க்குள் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்கலாம்.

புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச் சான்று அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்புகொண்டு இணையத்தில் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in