Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 22,500 கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், தற்போது, நீர்வரத்து குறைந்துள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 22,500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 5 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x