பதவிக்காக கட்சி மாறுபவர்கள் வரலாற்றில் இடம்பெற முடியாது : முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேட்டி

வாக்காளர் சேர்ப்பு முகாம்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.
வாக்காளர் சேர்ப்பு முகாம்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.
Updated on
1 min read

மாற்றுக் கட்சிகளில் இணைந்து பதவி பெற நினைப்பவர்கள் வரலாற்றில் இடம் பெற முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களை முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பதவி பெற்றவர்கள் தற்போது ஆட்சி மாற்ற சூழல் காரணங்களுக்காக மாற்றுக் கட்சிகளுக்கு அணி மாறுவது இயல்பான ஒன்று. அதிமுகவுக்கு தற்போது சோதனையான காலம் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் கட்டுப்பாடு மீறாமல் கட்சியை வழிநடத்துபவர்களின் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மாற்றுக் கட்சிகளில் இணைந்து பதவி பெற நினைப்பவர்கள் வரலாற்றில் இடம் பெற முடியாது.

சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கடந்த தேர்தலில் எதனால் தோற்றார் என்பது இத்தொகுதி மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in