

புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களை 15 தினங்களுக்குள் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், என நாமக்கல் வட்டாட்சியர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள 21 வாகனங்கள், புதுச்சத்திரம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விவரங்கள் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலக அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான அசல் ஆவணங்களை புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சமர்ப்பித்து 15 தினங்களுக்குள் தங்களது வாகனங்களை மீட்டுக் கொள்ள வேண்டும். உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.