

கனமழையால் வரத்து குறைந்ததால், கடந்த 3 வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 24-ம் தேதி நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.100 ஆகவும், சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.160 ஆகவும் தக்காளியின் விலை உயர்ந்திருந்தது.
இந்நிலையில் தற்போது மழை பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு தரத்துக்கு ஏற்ப தக்காளி மொத்த விலையில் நேற்று கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.62 ஆக விலை குறைந்திருந்தது.