

சென்னை மத்தியக் கோட்ட அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்குப் புதிய முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான நேர்முகத் தேர்வு, எண்.2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் வரும் டிச.3-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-லிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சுய தொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.