

வண்டலூர் அருகேயுள்ள புதுப்பாக்கத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 2 நாட்களாக இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) நடத்தப்படுகிறது. கரோனா சூழலை கருத்தில்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாண்டு சட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பாதிப் பேர் முதல் நாளும் எஞ்சிய பாதிப் பேர் மறுநாளும் பட்டம் பெறுகிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபகுதியும், 2-வது நாள் (சனிக்கிழமை) நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும் தலைமை விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் சட்டத்துறை செயலர் (சட்ட விவகாரங்கள்) பி.கார்த்திகேயன், பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், சட்டக் கல்வி இயக்குநர் சி.சொக்கலிங்கம், கல்லூரியின் முதல்வர் கவுரி ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.