

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பராம ரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை சின்ன அனுப் பானடியைச் சேர்ந்த உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் நான்கு புறமும் வணிகக் கட்டிடங்கள் உள்ளன. இதனால் நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளம் கழிவு நீரால் மாசடைந்துள்ளது.
இவ்விவகாரத்தை உயர் நீதி மன்றம் 2011-ல் தானாக முன் வந்து விசாரித்தது. அப்போது தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மேல்நடவடிக்கை இல்லை. 2019-ல் சில கடைகள் அகற்றப் பட்டன. அதன் பிறகும் மேல் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை.
இது குறித்து அறநிலையத் துறை ஆணையர், ஆட்சியர், மாநக ராட்சி ஆணையாளருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பரா மரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கூறியி ருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 195 கடை களில் 99 கடைகள் அகற்றப் பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கடைக்காரர்கள் அறநிலையத் துறையிடம் சீராய்வு மனு செய் துள்ளதால் நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தெப்பக்குளத்தை பராமரிக்காத அதிகாரியின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது, சரியாக வேலை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே, நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தனர்.
தெப்பக்குளத்தின் தற் போதைய புகைப்படங்களை அறநிலையத் துறை, மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தெப்பக்குளத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவிட்டும் விசார ணையை டிச.1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.