ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த 118 பள்ளி கட்டிங்களை இடிக்க நடவடிக்கை :

ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த 118 பள்ளி கட்டிங்களை இடிக்க நடவடிக்கை :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த 118 பள்ளி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 137 உள்ளன. இந்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி 95 பள்ளிகளில் உள்ள 272 கட்டிடங்களில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும், 50 பள்ளிகளில் உள்ள 118 கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கண்டறிந்துள்ளனர். அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, 272 கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும், 118 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in