

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை வகித்தார். ஆட்சியர் பி.மதுசூ தன்ரெட்டி முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது, விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் தரும் ரூ.2.4 லட்சத்தில் வீடு கட்ட முடியாது.
இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் மேலும் கடனாளியாகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன் என்று கூறினார்.