

சிவகங்கை அருகே குமார பட்டியைச் சேர்ந்த பாலகுரு மனைவி பாண்டியம்மாள் (50). இவர் நேற்று மாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்து செய்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.