சிறப்பு எஸ்.ஐ கொலை சம்பவத்தைத் தொடர்ந்து - மீண்டும் விசாரணைக்கு வரும் ஆடு திருட்டு வழக்குகள் :

சிறப்பு எஸ்.ஐ கொலை சம்பவத்தைத்  தொடர்ந்து -  மீண்டும் விசாரணைக்கு வரும் ஆடு திருட்டு வழக்குகள் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடர்களால் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிடப்பில் இருந்த ஆடு திருட்டு வழக்குகளை தனிப்படை போலீஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடர்களால் அண்மையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ஆடு திருட்டு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ஆடு திருட்டு வழக்குகளை தனிப்படை போலீஸார் மீண்டும் எடுத்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். மேலும், இதற்கு முன்பு ஆடு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள், தேடப்பட்டு வருபவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் கீரமங்கலம் அருகே குளமங்கலத்தில் 2 இடங்களில் 33 ஆடுகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆடு திருட்டு சம்பவங்கள் குறித்து பலர் புகார் தெரிவிப்பதில்லை என்றும், அப்படியே புகார் தெரிவித்தாலும் காவல் நிலையங்களில் பெரும்பாலும் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in