பிற மாநில தொழிலாளர் குறித்து கணக்கெடுப்பு :

பிற மாநில தொழிலாளர் குறித்து கணக்கெடுப்பு :
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் ந.கி. செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள், சாலை பணிகள், கட்டிட பணிகள் மற்றும் இதர ஒப்பந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, பிற மாநிலத்தவர் மற்றும் அவர்கள் தங்கியுள்ள இடங்கள் குறித்த விவரங்களையும், அவர்களுடைய ஆதார் அடையாள அட்டை, பான் அட்டையின் நகலையும், அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாநகர எல்லைக்குள் தன்னிச்சையாக போர்வை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிற மாநிலத்தவர்களும் காவல் நிலையங்களில் தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in