பணி நியமன முறைகேடு புகார் - பெரியார் பல்கலை.யில் விசாரணைக் குழு ஆய்வு :

பணி நியமன முறைகேடு புகார் -  பெரியார் பல்கலை.யில்  விசாரணைக் குழு ஆய்வு  :
Updated on
1 min read

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக நேற்று உயர் கல்வித்துறை விசாரணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோரின் பணி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தன.

இதனையடுத்து, முறைகேடுகளை விசாரிக்க குழு அமைத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டார். நேற்று ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா தலைமையிலான விசாரணை குழுவினர் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக பல்கலைக் கழக வட்டாரத்தில் கூறும்போது, "உயர்கல்வித்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவினர் நேற்று பல்கலைக் கழகத்துக்கு வந்தனர். அவர்கள் கேட்ட ஆவணங்களை வழங்கினோம். விசாரணைக்குழுவினர் ஆவணங்களில் ஆய்வு செய்தனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in