

தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது பாதையில் ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்துத் தடமாக உள்ளது. தென்மாவட்டங்களுக்கான விரைவு ரயில்களும், தினமும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டுக்கு போதிய ரயில் பாதை இல்லாததால், 170 மின்சார ரயில் சேவைகள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
3 கட்டங்களாக..
இதற்கிடையே, ரயில் பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இந்த தடத்தில் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு ஆய்வு செய்துள்ள நிலையில், தற்போது இந்த தடத்தில் ரயில்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார, விரைவு ரயில்கள் தாமதம் இன்றி இயக்கப்படும். அதுபோல், இந்த தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை கூடுதலாக இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.