மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் :

மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் :
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் மதுக்கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்த வாகனங்களுக்கான பொது ஏலம் நவ. 29 காலை 10 மணிக்கு எஸ்பி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்போர் எஸ்பி அலுவலகத்தில் ஏலம் விடுவதற்காக உள்ள வாகனங்களை பார்வையிட்டு, 27-ம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் அதற்கான தொகையை உடனே செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காதவர்களின் முன்பணம் திருப்பித் தரப்பட மாட்டாது. ஏல வாகனத் துக்கான ஜிஎஸ்டி வரியும் ஏலத்தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in