திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு :

Published on

திருநெல்வேலியில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு மறுவரையறை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்திலும், மற்ற பகுதிகளில் தேர்தலுக் கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத் திலும் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங் களை சரிபார்க்கும் பணிகள் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பெங்களூரிலிருந்து வந்திருந்த பொறியாளர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர். இப்பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், உதவி ஆணையர் (நிர்வாகம்) வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு ஆய்வு செய்யப் பட்டது.

இதுபோல், சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப் பட்டது. நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகீன் அபுபக்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in