Published : 24 Nov 2021 03:07 am

Updated : 24 Nov 2021 03:07 am

 

Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.55 கோடி மோசடி : இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை :

கோவை: ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இயங்கி வந்த ‘ஹெல்தி பவுல்ட்ரி பார்ம்ஸ்’ என்ற நாட்டுக் கோழிப்பண்ணை நிறுவனத்தினர், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என கவர்ச்சி விளம்பரம் செய்தனர். இதனை நம்பி, மொத்தம் 99 பேர் ரூ.1.55 கோடி முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்ததுபோல் உரிய தொகை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, கோபியை அடுத்த கூடக்கரையைச் சேர்ந்த பழனிசாமி, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் கடந்த 2012-ம் ஆண்டு புகார் அளித்தார். அதனடிப்படையில் நிறுவனத்தின் இயக்குநர்களான கார்த்திகா, எஸ்.பிரபு மற்றும் நிறுவனத்தில் பணியாற்றிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், நிறுவனத்தின் இயக்குநர்கள் கார்த்திகா, பிரபு ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்து உத்தவிட்டார். மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் க.முத்துவிஜயன் ஆஜரானார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x