Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

பாஜக தேசிய தலைவர் இன்று கோவை வருகை :

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விமானம் மூலம் இன்று கோவை வருகிறார்.

இதுதொடர்பாக, கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஆர்.நந்தகுமார் கூறும்போது, “பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (இன்று) நண்பகல் 12.15 மணியளவில் கோவை விமானநிலையம் வருகிறார். அவருக்கு கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, திருப்பூர் செல்லும் நட்டாவுக்கு பல்லடத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. திருப்பூரில் மதியம் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தை திறந்துவைத்து, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x