

சென்னை வடபழனி காவல் நிலைய தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு, வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனையிட முயன்றபோது, ஆட்டோவில் இருந்த இரு இளைஞர்கள் தப்பியோடினர்.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் இருவரையும் விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில், அவர்கள் வடபழனியைச் சேர்ந்த சூர்யா(21), சாலிகிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(40) என்பதும், விருகம்பாக்கத்தில் இரு கடைகளில் திருடிவிட்டு, அங்கிருந்து ஆட்டோவில் தப்பிவந்ததும் தெரியவந்தது.