

கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய முனையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படுகிறது.
இங்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கிளீனர் செல்வமணி (59) என்பவர், டேங்கர் லாரியில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஓட்டுநருடன் நேற்று முன்தினம் காத்திருந்தார்.
அப்போது செல்வமணிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைய டுத்து, ஆம்புலன்ஸ் அனுப்புமாறு பெட்ரோலிய நிறுவனத்திடம் ஓட்டு நர்கள் கேட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில் செல்வமணி உயிரிழந்தார். இத னால் ஆத்திரமடைந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், நிறுவனத்தின் நுழைவு வாயில் முன் செல்வமணியின் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட் டனர்.
அப்போது, ஆம்புலன்ஸ் வழங்க தாமதப்படுத்திய பெட் ரோலிய நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும் என வலிறுயுத்தினர்.
அவர்களுடன் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளும், வாங்கல் போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தது. பின்னர், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தினர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.