

திருநெல்வேலி இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழில் நிறுவனங்கள் அக்டோபர் மாதத்துக்கான இ.எஸ்.ஐ. பங்களிப்பு தொகை செலுத்துவதற்கான அவகாசம் நவம்பர் 15-ஆக இருந்தது. தற்போது நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையுள்ள காலத்துக்கான பங்களிப்பு தொகை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலதிபர்கள் தங்களின் தொழிலாளர்களின் யு. ஏ. எண்ணை, இ.எஸ்.ஐ.சி. ஆன்லைன் போர்ட்டலில் சேர்க்க வேண்டும். இது தொடர்பான, விவரங்களுக்கு அருகிலுள்ள இ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகத்தையோ அல்லது 0462 250 3521 என்ற எண்ணில் துணை மண்டல அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.