இலவச தையல் இயந்திரம் பெற சலுகை :

இலவச தையல் இயந்திரம் பெற சலுகை :
Updated on
1 min read

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இவற்றை பெறுவதற்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நகர், தென்காசி-627811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in