போளூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் - பாலியல் வழக்கில் தேடப்பட்ட கல்லூரி தாளாளர் சரண் :

ஜோதிமுருகன்.
ஜோதிமுருகன்.
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே மாணவி களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப் பட்டு வந்த தனியார் கல்லூரி தாளாளர், போளூர் நீதிமன்றத்தில் நேற்று சரண டைந்தார்.

திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டி கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு விடுதி காப்பாளர் அர்ச்சனா துணை போனதாக கூறப் படுகிறது. இதனை கண்டித்து, கடந்த 19-ம் தேதி திண்டுக்கல்–பழநி சாலையில் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, தாளாளரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதை யடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

இது குறித்து தாடிக்கொம்பு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தாளாளர் ஜோதிமுருகனை தேடி வந்தனர். கல்லூரி மற்றும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், போளூர் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில், திண்டுக்கல் ரிங் ரோடு, நாராயணதாஸ் நகரில் வசிக்கும் பழனிசாமி மகனும், தனியார் கல்லூரி தாளாளருமான ஜோதிமுருகன்(45) நேற்று சரணடைந்தார். அவரை, 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் வெங்கடேசன் உத்தர விட்டார்.

இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் ஜோதி முருகன் அடைக்கப்பட்டார். சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகரான இவர், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in