Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

மழை வெள்ளத்தால் சுண்ணாம்பாறு படகு குழாம் கடும் சேதம் : உடனே சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றின் கரையில் நோணாங்குப்பம் படகு குழாம், 3 கி.மீ தொலைவுக்கு ஆறும், கடலும் இணையும் முகத்துவாரம் அருகே இயற்கையாக அமைந்த பேரடைஸ் கடற்கரை உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கடற்கரையில் ஏராளமான தென்னை மரங்களும் உள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சங்கராபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நோணாங்குப்பம் படகு குழாமில் அமைக்கப்பட்டிருந்த படகு துறைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. பொழுது போக்கு மையமாக திகழ்ந்த பேரடைஸ் கடற்கரை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அப்பகுதியில் ஆறும், கடலும் ஒன்றாக கலந்து நீர்ப்பரப்பாக காட்சி தருகிறது.

இதுதோடர்பாக புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழக அனைத்துஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், இணை ஒருங் கிணைப்பாளர்கள் கஜபதி, கணேஷ்குமார், கலைவாணன் ஆகியோர் கூட்டாக கூறுகையில், “புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் கரோனா ஊரடங்கால் 10 மாதமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு ஊழியர் தற்கொலை செய்துள்ளார். மருத்துவ செலவுக்கு பணமின்றி 2 ஊழியர்கள் நோயால் இறந்துவிட்டனர். ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு மீண்டும் கழகம் இயங்கி வரும் நிலையில் 5 மாத ஊதியம் வழங்கப்பட்டது. 6 மாத ஊதியம் நிலுவையில் உள்ளது. தற்போது பெருமழையால் படகு குழாம், கடற்கரை உணவகங்கள் சேதமடைந்துள்ளன. புதுவை அரசு சேதமடைந்த இடங்களை பார்வையிட்டு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து மறுசீரமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊழியர்களின் 6 மாத ஊதியத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x