திருவாடானை அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி - பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் தர்ணா :

திருவாடானை அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி  -  பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் தர்ணா :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை அருகே ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவாடானை அருகே அரசத் தூர் கிராமத்தில் 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் கிராமத்தின் பூர்வீகக் குடியிருப்புப் பகுதி, மயானம், வழிபாட்டுத் தலம் மற்றும் ஊருணி ஆகியவற்றை இணைக்கக் கூடிய கிராம இணைப்புச் சாலையை, தனிநபர் ஆக்கிரமித்து நீதிமன்றத்தில் வழக் குத் தொடர்ந்துள்ளார்.

எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தார்ச் சாலை அமைத்துத்தர வேண்டும் எனக்கோரி, கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். பின்னர் அவ ர்கள் அங்கு தர்ணாவில் ஈடுபட் டனர். அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கோட்டாட்சியர் சேக் மன்சூர், வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத் தினர்.

ஆனால் கிராம மக்கள் ஆட்சியர் வந்து குறையைக் கேட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்றனர். இதை யடுத்து ஆட்சியர் சங்கர்லால் குமாவத் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார். மேலும் கோட்டாட்சியர் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in