

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சம்மேளனம்- சிஐடியூ சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
சிஐடியூ கிளைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் வெள் ளத்துரை போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாவட்ட உதவித் தலைவர் வேலுச்சாமி நிறைவுரையாற்றினார்.
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.