ஆசனூரில் வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழப்பு :

ஆசனூரில் வாகனம் மோதியதில் சிறுத்தை உயிரிழப்பு :
Updated on
1 min read

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் வனச்சரகம் உள்ளது. நேற்று அதிகாலை ஆசனூர் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ஆசனூர் வனத்துறையினர், சிறுத்தையின் உடலை கைப்பற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இறந்த பெண் சிறுத்தை இரண்டு வயது மதிக்கத்தக்கது எனத் தெரிவித்த வனத்துறையினர், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படை யில் இரவில் அப்பகுதியைக் கடந்த வாகனங்கள் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in